"காலங்கள் மாறினாலும்,
நாகரிக கோலங்கள் மாறினாலும்,
நம் கலாச்சாரம் மாறக்கூடாது.
மாற்றகூடாது.!

கலாச்சாரம் எனும் அணையாவிளக்கை
புதிய தலைமுறைகளுக்கு ஏற்றவாறு
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொண்டு சேர்ப்பது
நம் கடமை.!

அதில் முதல் அடியெடுத்து வைக்க வாய்ப்பு
கொடுத்த எங்கள் குலதெய்வத்திற்கும் எம் குலமக்களுக்கும்
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.!"

"eMoy மென்பொருளானது தென்னாட்டு மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போன்றதாகும்"

ஆம்! காலம் மாறிக்கொண்டிருக்கிறது.ஆனால் நம் கலாச்சாரம் மாறவில்லை.

தாய்மாமன் உறவு,அங்காளி பங்காளி உறவு,கோவில் முறைகள்,சீர்வரிசை,செய்முறை என உறுவுகளை கொண்டாடுவதில் உலகிற்கே எடுத்துக்காட்டாய் திகழ்கின்றோம்.இதோ நம் கலாச்சாரத்தை முன்னோக்கி கொண்டுசெல்ல,நம் தலைமுறைகளுக்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்த மொய் எழுதுவதையும்,கணக்கிடுவதையும்,துல்லியமாக வரையறுப்பதையும் நொடி நேரத்தில் செய்து முடிக்க eMoy வந்துவிட்டது

மொய் எழுதுவது,எழுதிய மொய் பாதுகாப்பது போன்ற கடினமான மற்றும் குழப்பமான வேலைகளை,மிகவும் சுலபமாக அதே சமயம் நடைமுறைக்கு சாத்தியமாக 100% கை கொடுக்கும் eMoy.

கேள்வி : நாம் மொய் நோட்டில் காலம் காலமாக எழுதிகொண்டிருக்கின்றோம்.அது தான் வசதியாகவும்,நம்பகமாகவும் இருக்கிறது.eMoyல் அப்படியென்ன சிறப்பம்சம் இருக்கிறது.என்னதான் இருந்தாலும் கம்ப்யூட்டரை நம்புவது ?

பதில் : eMoy எந்திரன் சிட்டி ரோபோ போல மிக வேகமாக செயல்படும் 5 மனிதர்கள் 5 மணிநேரத்தில் செய்யும் வேலையை 1 மணிநேரத்தில் எந்த தவறும் வராமல் செய்து முடிக்கும்.அதேநேரத்தில் 100% நம்பிக்கையானது.எப்படியெனில் மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளை eMoy வற்ப்புறுத்தி சொன்னாலும் செய்யாது.மிகவும் நம்பிக்கையான சேவகன் போல!

கேள்வி : eMoyல் அப்படியென்ன சிறப்பம்சம் உள்ளது.மொய் எழுதுவதை எளிதாக்குகிறது அவ்வளவு தானே?

பதில் : மொய் எழுத்துவதை சுலபமாக்குகிறது என்பது உண்மைதான்.ஆனால் அதையும் தாண்டி ஏறாளமான நன்மைகள் உள்ளன.

1.மொய் எழுதும் நேரத்தை குறைத்து மக்கள் கூடி நிற்பதைக் குறைக்கிறது.
2.மொய் செய்ததும் மொய் செய்த நபருக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனே தகவல் தெரிவித்து உறுதி செய்கிறது.
3.மொய் செய்த உடனே மொய் ரசீது தருவதால் அது நம்பிக்கைக்கு பாத்திரமாகிறது.இது தற்போது நடைமுறையில் இருக்கும் நோட்டு போட்டு எழுதுவதில் இந்த வசதி இல்லை.
4.குறுஞ்செய்தி மற்றும் மொய் ரசீது வழங்குவதால் தேவையற்ற மற்றும் வீன்குலப்பங்களுக்கும்இடமில்லை

சிறப்பம்சங்கள் தொடர்ச்சி...

5.தாய்மாமன்மார்கள் முதலில் யார் செய்யவேண்டும் என்கிற குழப்பமும் தேவையில்லை.யார் பெயரை முன்னிறுத்த வேண்டுமோ அதை செய்து கொள்ளலாம்.
6.மொய் பணத்தை யாரிடம் வேண்டுமானாலும் நம்பி கொடுத்து அனுப்பி செய்து கொள்ளலாம்.ஏனெனில்,மொய் செய்த அடுத்த நொடி SMS மொய் செய்ய சொன்னவருக்கு சென்றுவிடும்.
7.விசேஷம் முடிந்தவுடன் மணிக்கணக்கில் எண்ணி சரிபார்க்க தேவையில்லை.மொத்த மொய் ரூபாயை மிக துல்லியமாக கணக்கு காட்டிவிடும்.ரூபாய் நோட்டுகளை இனம் பிரித்து கட்டுபோட்டால் போதும்.

கேள்வி : அதெல்லாம் சரி.எல்லாமே கம்ப்யூட்டரை நம்பித்தான் செய்கிறோம்.மொய் எழுதிக்கொண்டிருக்கும் பொழுது மின்தடை ஏற்ப்பட்டால் என்ன செய்வது ?

பதில் : நல்ல கேள்வி.இதற்கு மின்சாரம் இருக்க வேண்டிய அவசியமில்லை.
பேட்டரியுடன் கூடிய கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால் அந்த பயம் தேவையில்லை.

கேள்வி : மொய் எழுதினால் மட்டும் போதுமா ? அக்கா தங்கச்சிக்கு செய்த நகைகள்,பழம்தட்டு,கும்பிடுபணம் இதெல்லாம் எப்படி வரவு வைப்பது ?

பதில் : யார் எவ்வளவு மொய் செய்தார்கள் என்ற விபரத்தோடு அவர்கள் என்ன செய்தார்கள் அதன் இன்றைய மதிப்பு என்ன என்பதை அவர்கள் பெயருக்கு அடியில்அடிக்கோடிட்டு காட்டப்படும்.

கேள்வி : ரொம்பசந்தோசம்பா..ஆக மொத்தம் காலத்துக்கு ஏத்தமாதிரி நாமளும் மாற வேண்டிய நேரம் வந்துடுச்சு...உண்மைதான் நாளைக்கு நம்ம பிள்ளைகள் இவ்வளவு வேலைகள் பார்க்க முடியாதுனு விசேஷத்தை வெறுக்க ஆரமிச்சுடுவாங்க.சொந்தபந்தம் விட்டுப்போகும்.இப்படி சுலபமா ஒரு நடைமுறையை குடுத்துட்டோம்னா கால காலத்துக்கும் நம்ம கலாச்சாரம் அழிஞ்சு போயிடாம உயிரோட இருக்கும்..!

பதில் : இருங்க.இன்னும் விஷயம் இருக்கு.உங்க வீட்ல இருக்க உங்க மொய் நோட்டை உங்களுடைய செல்போனில் ஏத்திகுடுத்திருவோம். நீங்க எங்க இருந்தாலும் உங்களுடைய மொய் கணக்கு வழக்கை பார்த்துக்கொள்ளலாம்.இனி வரும் காலத்துல உங்க போன்லையே மொய் செஞ்சுக்கலாம்,வாங்கிக்கலாம்.இப்பவே நீங்க யாருக்கு எவ்வளவு மொய் செய்யணும்னு SMS வந்துகிட்டே இருக்கும்.அதேபோல மொய் செய்தவருக்கு வாழத்து செய்தியும் போகும்,நினைவூட்டவும்.செய்யும்.இதுபோல ஏகப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மொய் குறியீட்டு எண் முறை

மொய் எழுதுவதை எளிமையாக்க மொய் எண் நடைமுறை படுத்தப்படுகிறது.

மொய் எழுதுபவரின் பெயர் மற்றும் முழு விபரங்களும் இந்த மொய் எண்ணில் பதிவு செய்யப்படுகிறது. இதனால் மொய் எழுதுபவர் அவர்களது முழுவிபரங்களை சொல்ல தேவையில்லை. இந்த மொய் எண்ணை மட்டும் சொன்னால் போதும்.

மேசை வாரியான மொய் விபரம்

மேசை 1,மேசை 2 ல் செய்யப்பட்ட மொத்த தொகையை தெரிந்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் எப்போது தேவைபடுகிறதோ அப்போதெல்லாம் மொத்த மொய் பணத்தை பார்க்க முடியும்.

இதுமட்டுமல்லாமல் ஒரு வரைபடமும் பட்டியலும் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் விழாவிற்கு வந்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து பார்க்க முடியும்.

தொடர்புக்கு

உசிலம்பட்டி

eMoy

T.E.L.C. பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில்,
பேரையூர் சாலை, உசிலம்பட்டி, மதுரை - 625532
தொலைபேசி எண் :
9500444936, 9500444457

மதுரை

eMoy

12H, ஸ்ரீராம் காம்ப்ளக்ஸ் பைபாஸ் ரோடு,
KFC எதிர்புறம், மதுரை - 625010
தொலைபேசி எண்கள் :
9500445553, 9788777477

திருமங்கலம்

eMoy

51, தனலெட்சுமி பைனான்ஸ் காம்ப்ளக்ஸ்,
சோழவந்தான் ரோடு, திருமங்கலம் - 625706
தொலைபேசி எண்கள் :
9500445553, 9788777477

திண்டுக்கல்

eMoy

ஜீவா நம்பி காம்ப்ளக்ஸ்,
வத்தலக்குண்டு மெயின் ரோடு,
குட்டியபட்டி சந்திப்பு, திண்டுக்கல் - 624002
தொலைபேசி எண் :
9500444437

தேனி

eMoy

M.S.P. காம்ப்ளக்ஸ்,
தேனி மெயின் ரோடு, ஆண்டிபட்டி - 625512
தேனி மாவட்டம்
தொலைபேசி எண் :
9500444937